logo
தமிழகத்தை பிரித்து கொங்குநாடு என்று அறிவிக்க வேண்டுமென  பாஜகவினர் யாரும்கூறவில்லை: திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கருத்து

தமிழகத்தை பிரித்து கொங்குநாடு என்று அறிவிக்க வேண்டுமென பாஜகவினர் யாரும்கூறவில்லை: திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கருத்து

12/Jul/2021 03:21:13

புதுக்கோட்டை, ஜூலை: தமிழகத்தை பிரித்து கொங்குநாடு என்று அறிவிக்க வேண்டுமென  பாஜகவினர் யாரும் இதுவரை கூறவில்லை. ஜாதி அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று கூறினால் அது தவறு என்றார் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர்.  

புதுக்கோட்டையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது:  தற்போதைக்கு தமிழகத்தைத் பிரிக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை எதிர்காலத்தில் வேண்டுமானால் அத்தகைய சூழல் ஏற்படலாம் இருப்பினும் கொங்குநாடு என்ற சிலபாஜகவினரின் பதிவைத் தவிர தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்று உருவாக்க வேண்டும் என எந்த பாஜக தலைவர்களும் இதுவரை கூறவில்லை.

ஜாதி மற்றும் அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று கூறினால் அது தவறானது.தமிழகத்தின் தலைநகராக திருச்சியை ஆகவேண்டும் என்று கூறுவது இயலாத காரியம் ஆனால் இரண்டாவது தலைநகராக திருச்சியை உருவாக்க முடியும். அதற்கான பணிகளை தமிழக அரசு தற்போது முன்னெடுக்க வேண்டும்.

ஜெய் ஹிந்த் என்ற சொல்லுக்கு இந்தியா வாழ்க என்பது பொருள். விருப்பப் படுபவர்கள் ஜெய்ஹிந்து என்று கூறலாம் .விரும்பப்படாதவர்கள் எதையும் கூறாமல் இருக்கலாம் ஆகவே இதனை சர்ச்சைக்கு ஏற்படுத்த வேண்டாம்.

தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அனைத்து அரசியல் கட்சிகளின் விருப்பமாக உள்ளது தமிழக அரசு நீட் குறித்து ஆராய்வதற்கு குழு அமைத்துள்ளது தவறான செயல் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருப்பது மத்திய அரசின் நிலைப்பாடு. தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது .நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறுகிறது என்று பார்ப்போம் அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சி குழப்பமான கட்சியாக தான் உள்ளது. இரட்டை தலைமை வேண்டாம் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். ஒற்றைத் தலைமை வேண்டும் என்று சிலர் கூறியிருந்தனர்.தினகரன் அதிமுக சசிகலா அதிமுக என்று பிரிந்து விட்டது.சசிகலா அதிமுகவிலேயே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அந்தக் கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பம்  நீடிக்கிறது.

இதற்கிடையில் சசிகலா எம்ஜிஆருக்கே நான் ஆலோசனை கூறினேன் என்று கூறுவது வேடிக்கையானது. எம்ஜிஆர் குறித்து யார் வேண்டுமானாலும் எந்த கருத்தையும்  கூறலாம். ஏனென்றால் அவர் திரும்பி வந்து கேட்கவா போகிறார் என்ற ரீதியில் கருத்துகளைக் கூறி வருகின்றனர். 

பாஜக  தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் இளைஞரை தலைவராக நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது இருப்பினும் யார் தலைவராக வந்தாலும் அதனால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை என்றார்  திருநாவுக்கரசர். 


Top