logo
 ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ.1 லட்சம்  மதிப்பில் காரையூர் மருத்துவமனைக்கு உபகரணங்கள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் காரையூர் மருத்துவமனைக்கு உபகரணங்கள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

11/Jul/2021 01:28:48

புதுக்கோட்டை, ஜூலை: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ.1 லட்சம்  மதிப்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் இன்று (10.07.2021) வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: 

கோவிட் தொற்று காலத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர்  சிறப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. 

ர்கள் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கோவிட் நிவாரணத் தொகை, நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் என தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். முதல் ஐந்து ஆண்டு காலத்திற்குள்ளாக  அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உள்ளார்கள். 

 குறிப்பாக அனைத்து துறைகளையும் முன்னேற்றமடைய செய்து, மக்கள் நலனுக்கான சிறந்த ஆட்சியை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்மாதிரி மாநிலமாக விளங்கசெய்யும் வகையில்  பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்றார் அமைச்சர் ரகுபதி. 

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், பொது சுகாதாரத் துணை இயக்குநர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, ஒன்றியக்குழுத் தலைவர் சுதா, ஒன்றியக் குழு உறுப்பினர்  அடைக்கலமணி மற்றும் முத்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் பழனியாண்டி, செயலாளர் இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.  


Top