logo
ஆன்லைன் லாட்டரி சூதாட்டம்: பெருந்துறையில் 4 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி சூதாட்டம்: பெருந்துறையில் 4 பேர் கைது

10/Jul/2021 01:41:40

ஈரோடு, ஜூலை: பெருந்துறையில் மொபைல் போனில் ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, நேதாஜி வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் குமரேசன்(23). இவர் பெருந்துறை பஸ் ஸ்டாண்டு எதிரில் உள்ள ஒரு லாட்ஜில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். நேற்றுமுன்தினம் குமரேசன் பணியில் இருந்த போது ஈரோட்டை சேர்ந்த சக்திவேல் என்பவர் ரூம் வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார். இதையடுத்து சக்திவேலுக்கு ரூம் வழங்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் அடுத்தடுத்து சிலர் வந்து சென்றுள்ளனர். 

இதனால் சந்தேகமடைந்த குமரசேன் சம்மந்தப்பட்ட அறைக்கு சென்று பார்த்த போது மொபைல் போனில் ஆன்லைனில்  லாட்டரி சூதாட்டம் நடத்தி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெருந்துறை போலீசில் இது குறித்து புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்ட ஈரோடு, அசோகபுரத்தை சேர்ந்த கோபி என்கிற வெங்கடாச்சலம்(36), வீரப்பன்சத்திரம், எம்ஜிஆர் வீதியை சேர்ந்த முத்துநாகலு மகன் காளிமுத்துக்குமார்(26), நேருவீதி, கல்யாணகிருஷ்ணன் என்பவரது மகன் விக்னேஸ்வரன்(26), ஏஎஸ்ஜி வீதியை சேர்ந்த சக்திவேல்(41) ஆகிய 4 பேரை கைது செய்து சூதாட்டப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆசீப் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Top