logo
கர்நாடக அரசு மேக்கேதாட்டூவில்  அணை கட்டுவது ஏற்புடையதல்ல:ஈரோட்டில் ஜி.கே. வாசன் பேட்டி

கர்நாடக அரசு மேக்கேதாட்டூவில் அணை கட்டுவது ஏற்புடையதல்ல:ஈரோட்டில் ஜி.கே. வாசன் பேட்டி

10/Jul/2021 01:31:58

ஈரோடு, ஜூலை: ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளதால், மத்திய மாநில அரசுகள் வரிகளை குறைப்பதுடன், நிபுணர் குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாநில அரசு முயன்றவரை மக்கள் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்காக மத்திய அரசு மாநில அரசு வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் தண்ணீர் தேங்கும் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மாதக்கணக்கில் காத்திருக்காமல் விரைந்து நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பயிர் காப்பீடு இழப்பீட்டை அந்தந்த பருவத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மின் இணைப்பு பெறுவதிலும் மாற்றம் செய்வதில் உள்ள நடைமுறையை எளிதாக்க வேண்டும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் காலம் தாழ்த்தாமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

விவசாயிகள் பயன்படுத்தும் அனைத்து உபகரணங்களும் முழு மானியம் வழங்க வேண்டும். டீசல் விலை உயர்வால் விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர் ,உழவு, எந்திரம் ,அறுவடை எந்திரம் உள்பட அனைத்து எந்திரங்களுக்கும் வாடகை இரு மடங்கு உயர்ந்து விட்டது. எனவே மத்திய மாநில அரசுகள் டீசல் மானியம் வழங்க வேண்டும். காவிரி உள்ளிட்ட நீர் உரிமை சார்ந்த தடுப்பணை விஷயங்களுக்கு மத்திய அரசுடன் பேசி விவசாய நலன் சார்ந்த உரிமை காக்க வேண்டும். 


கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டியது ஏற்புடையவை அல்ல. தமிழகத்தின் நீராதாரங்களை பாதிக்கும் திட்டங்களை ஏற்க முடியாது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டூவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கூறியதில் மத்திய அரசு உறுதியுடன் இருக்க வேண்டும். தமிழக உரிமையை நிலைநாட்ட வேண்டும். 

டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 வீரர்கள் இடம் பிடித்து இருப்பது மகிழ்ச்சிக்குரியது. குறிப்பாக பேரா ஒலிம்பிக்கில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்லும் உயரிய நிலையை அடைந்துள்ளார். அவருக்கு த.மா.கா.சார்பில் வாழ்த்துள். கல்வியில் ஒருபோதும் அரசியல் கூடாது என்பது எங்கள் நிலை.நீட் தேர்வை பொருத்தவரை அது அகில அளவில் நடக்கக் கூடியது. தமிழகத்தில் அரசியல் காரணமாக ஒரு சிலர் மீண்டும் ஒரு சிலர் வேண்டாம் என்று கூறி வருகின்றனர். கடந்த ஆட்சியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக கூடுதலாக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

தற்போது உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதுவரை மாணவர்களை குழப்ப வேண்டாம். ஒன்றிய அரசு , மத்தியரசு என்ற வார்த்தை சொல் விளையாட்டால் மத்திய அரசின் , மாநில அரசின் அதிகாரத்தை கூட்டவோ , குறைக்கவோ முடியாது.  அதிமுக தலைமையிலான கூட்டணி தொடர்கிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். 

ஈரோட்டில் புதை சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். ஈரோட்டில் நெல் கொள்முதல் நிலையம் ஆண்டுதோறும் திறந்திருக்க வேண்டும் .வியாபாரிகள் நலன் நேதாஜி காய்கறி மார்க்கெட் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். புதிய அரசு கொரோனா 3-ஆம் அலைய கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி பற்றாக்குறை வரும் காலங்களில் எங்கும் இருக்கக்கூடாது அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்

Top