logo
பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான சேர்க்கை: ஆட்சியர் கவிதாராமு தகவல்

பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான சேர்க்கை: ஆட்சியர் கவிதாராமு தகவல்

09/Jul/2021 08:33:03

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை மாவட்டத்தில் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. 

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச கல்வி 2021-2022 -ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளி தமிழக அரசு மூலம் செயல்பட்டு வருகிறது. 

உங்கள் அல்லது உங்கள் அருகில் உள்ள பள்ளி பருவ மாணவர்கள் கண்பார்வையில் 40 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை குறைபாடு உடையவர்களாக இருந்தால், இவர்களுக்கான இந்த சிறப்பு பள்ளியில் சேர்த்து இலவச கல்வி பெறலாம்.

இப்பள்ளியில் பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கு கற்பிக்க சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர். பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கு கணினி கற்றுத்தரப்படும். சத்தான உணவு, சீருடை, தங்கும் விடுதி அனைத்தும் இலவசம். ஆண்டுக்கு ஒரு முறை கல்விச்சுற்றுலா, ஆண்டுக்கு ஒரு முறை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். விடுதியுடன் கூடிய சிறப்புப்பள்ளி. குழந்தைகளை பராமரிக்க விடுதிக்காப்பாளர், சமையலர் மற்றும் ஆயா ஆகியோர் உள்ளனர்.

பார்வை குறைபாடுடைய மாணவர்களை பள்ளியில் சேர்க்க 9840272383, 8610199787, 9789533963 என்ற அலைபேசி எண்ணிலோ, 04322 226452 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தலைமை ஆசிரியர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில், புதிய பேருந்து நிலையம், புதுக்கோட்டை- 622001 என்ற முகவரியில் அணுகலாம்.

Top