logo
ஈரோட்டில் சாலையோர மின்கம்பங்கள் அடுத்தடுத்து கீழே சாய்ந்ததால் பரபரப்பு

ஈரோட்டில் சாலையோர மின்கம்பங்கள் அடுத்தடுத்து கீழே சாய்ந்ததால் பரபரப்பு

05/Jul/2021 01:28:51

ஈரோடு, ஜூலை: ஈரோடு திருநகர் காலனி பகுதியில் அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் கீழே சாய்ந்ததால்  அப்பகுதி முழுவதும் மிண் இணைப்பு துண்டிக்கப்பட்டதுசம்பவம் நடந்த நேரத்தில்  இந்தப் பகுதியில்  போக்குவரத்து இல்லாததால் பெரும் விபத்து  தவிர்க்கப்பட்டது.

 

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து கருங்கல்பாளையம் செல்லும் வழியான திருநகர் காலனி பகுதியில் சாலை ஓடத்தில் ஏராளமான மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இந்நிலையில் திடீரென ஒரு கம்பம்  கீழே சாய்ந்ததுஇதைத்தொடர்ந்து  அந்த மின்கம்பத்தோடு தொடர்புடையகம்பங்களும்  ஒன்றன்பின் ஒன்றாக  சாய்ந்து  கீழே விழுந்தது. ஞாயிற்றுகிழமை என்பதால் மக்கள் நடமாட்டமின்றி சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்ததால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

 இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய பணியாளர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். இதனையடுத்து சாலையில் கிடைக்கும மின்கம்பங்களை அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை கட்டுபடுத்தினர்.

சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பங்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக மின்வாரியத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை என்ற தமிழக மின்துறை அமைச்சரின் கூற்று சரியானதுதான்  என்பதற்கு  இந்த சம்பவம்  உதாராணமாகப்  பார்க்கப்படுகிறது.

Top