logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில்  ரூ.1.40 கோடிக்கு கதர் விற்பனை இலக்கு: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.1.40 கோடிக்கு கதர் விற்பனை இலக்கு: ஆட்சியர் தகவல்

02/Oct/2020 07:17:03

புதுக்கோட்டை சீதாபதி விநாயகர் கோயில் அருகில் உள்ள  கதர்அங்காடியில் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  (02.10.2020)  தொடங்கி வைத்தார்.

தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடக்கி வைத்து பொது விநியோகத் திட்டத்தில் கதர் கிராமப் பொருட்களை அதிகளவில் விற்பனை செய்த புதுக்கோட்டை நகர மொத்த விற்பனையாளர் கூட்டுறவு சங்க செயலாளார் கிருஷ்ணக்குமார் மற்றும் திருமயம் வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க செயலாளர் முத்துக்குமார் ஆகியோருக்கு நினைவு பரிசுகளை வழங்கிக் கூறியதாவது.தேசத் தந்தை காந்தியடிகளின் பிறந்தநாள்  நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  அண்ணல் காந்தியடிகள் அனைவரையும் கதர் ஆடை அணிய அறிவுறுத்தினார்.

 அதனடிப்படையில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஏழை, எளிய நூற்போர் மற்றும் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. சுதந்திர போராட்ட சின்னமாக திகழும் கதர் ஆடைகளை அனைவரும் வாங்கி அணிய வேண்டும். 

புதுக்கோட்டை மாவட்டத்தில்  புதுக்கோட்டை, அறந்தாங்கியில் காதிகிராப்ட் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்று ஊராட்சி ஒன்றியங்கள், அரசு மருத்துவமனைகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் போன்றவற்றில் தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு 6 தற்காலிக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு கதா; விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு  தீபாவளி கதா; சிறப்பு விற்பனையில் கதர் பருத்தி ரகங்கள்,  கதர்  பட்டு ரகங்கள்,  கதர் பாலியஸ்டர் ரகங்கள் போன்றவைகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு ரூ.50.40 லட்சம் மதிப்பில் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.130.90 லட்சம் மதிப்பில் கதர் விற்பனை செய்ய இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கதர் மற்றும் கிராமப்பொருட்களை வாங்கி கதர் தொழிலை மட்டுமே நம்பி வாழும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு நல்கிட கதர் ரகங்கள் விற்பனைக்கு ஆதரவு அளித்திட வேண்டும் என்றார் ஆட்சியர்.

இந்நிகழ்ச்சியில்,  கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குநர் பாலகுமாரன், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, உதவி கதர் அலுவலா; சந்திரசேகரன், மேலாளர் கருப்பையன், பொதுமக்கள் உள்ளிட்டோர்.


Top