logo
காந்தி ஜெயந்திக்கு  முதல்நாளில் ஈரோட்டில் ரூ.6 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை..!

காந்தி ஜெயந்திக்கு முதல்நாளில் ஈரோட்டில் ரூ.6 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை..!

02/Oct/2020 06:26:27

ஈரோடு மாவட்டம் முழுவதும் 211 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா  தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை முதல் நாளில்  வழக்கத்தைவிட விற்பனை அதிகமாக இருக்கும். மதுப்பிரியர்கள்  அதிக அளவில் டாஸ்மாக் கடைக்கு படையெடுத்து தங்களுக்கு வேண்டிய மது வகைகளை அள்ளிச் செல்வார்கள். மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.3 கோடிக்கு விற்பனை நடப்பது வழக்கம்.

இந்நிலையில், அக்.2காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், முதல்நாளான வியாழக்கிழமை  மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட மதுப்பிரியர்களின்  கூட்டம் அதிகமாக இருந்தது.

காலை முதல் மதியம் வரை டாஸ்மாக் கடையில் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் மாலை நேரத்தில்  கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும்  ரூ.6 கோடியே 12 லட்சத்து 7 ஆயிரத்து 30 ஆயிரத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. இது வழக்கத்தைவிட கூடுதலாக ரூ.2 கோடி விற்பனை ஆகியுள்ளது. 


Top