logo
தேசிய மருத்துவர்கள் நாள்  (ஜூலை 1) இன்று: நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தேசிய மருத்துவர்கள் நாள் (ஜூலை 1) இன்று: நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

01/Jul/2021 07:21:12

இந்தியாவில் 1991 -ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1 -ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் நாள் (National Doctors Day) கொண்டாடப்படுகிறது. பிதான் சந்திரா ராய் (Dr. Bidhan Chandra Roy) நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவரான பிதான் சந்திர ராய், பீகார் மாநிலத்தில் 1882 -ஆம் ஆண்டு ஜூலை 1 -ஆம் தேதி பிறந்தார். 80 ஆண்டுகள் கழித்து இதே தினத்தில் அவர் மறைந்தார். அவரின் பிறந்ததேதியும், மறைந்த தேதியும் ஒரே நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் தனது பணியை செய்தார். 1948 -ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 1962 -ஆம் ஆண்டு ஜூலை 1 -ஆம் தேதி வரை 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக செயல்பட்டார். முதல்வராக செயல்பட்ட போதிலும் சரி, மருத்துவராக செயல்பட்ட போதிலும் சரி, தனது பணியை திறம்பட செய்தார். மக்களுக்கு சேவை செய்வதிலேயே தனது வாழ்நாளை பெரும்பாலும் கழித்தார்.

இவரின் சேவையை பாராட்டிய மத்திய அரசு, அவரை கவுரவிக்கும் விதமாக 1961 -ஆம் ஆண்டு பிதன் சந்திரா ராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கியது. பிதன் சந்திரா ராயின் சேவையை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஜுலை 1 -ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் நாளாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு 1976 -ஆம் ஆண்டு முதல் டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.

Top