logo
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி-யாக  சைலேந்திரபாபு நியமனம்

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு நியமனம்

29/Jun/2021 09:48:06

தமிழக அரசின் புதிய டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செவ்வாய்க்கிழமை  வெளியானது.

தமிழகத்தின் தற்போதைய டி.ஜி.பி-திரிபாதியின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைவதை முன்னிட்டு புதிய டி.ஜி.பி.,யை தேர்ந்தெடுக்கும் பணி ஏற்கெனவே தொடங்கி விட்டது.ஒரு டி.ஜி.பி -யின் பதவிக்காலம் முடிவடையும் முன்னரே, அடுத்த டி.ஜி.பி-க்கான தகுதியுள்ள அதிகாரிகள் சிலரது பெயர்களை தேர்வு செய்து, அந்த பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அனுப்பி வைப்பது வழக்கம்.

தகுதி, சீனியாரிட்டி உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில், அந்த பட்டியலை பரிசீலிக்கும் உள்துறை மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள், அவர்களில் இரண்டு அல்லது மூன்று பெயர்களை இறுதி செய்து, தமிழக அரசுக்கு பரிந்துரையாக அனுப்பி வைப்பார்கள். அதிலிருந்து ஒருவரை தேர்வு செய்து, புதிய டி.ஜி.பி- யாக தமிழக அரசு நியமிக்கும்.

இந்நிலையில் தமிழக புதிய டி.ஜி.பி. தேர்வு குறித்த நடந்த ஆலோசனையின் போது தமிழக அரசால் வழங்கப்பட்ட பட்டியலில் மூன்று பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சைலேந்திர பாபு தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டார். சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையின் 1987 -ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார்.

Top