logo
அரசு செட்டாப் பாக்ஸ்  புகார்களை  தொலைபேசி எண்:   ஆட்சியர்   அறிவிப்பு

அரசு செட்டாப் பாக்ஸ் புகார்களை தொலைபேசி எண்: ஆட்சியர் அறிவிப்பு

21/Jun/2021 08:19:32

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில்   அரசு செட்டாப் பாக்ஸ் தொடர்பான  புகார்களை பொதுமக்கள் தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு வெளியிட்ட தகவல்:     தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் பொது மக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை மாத சந்தா தொகை ரூ.140 மற்றும் ஜி.எஸ்.டி கட்டணத்தில் உள்ளூர் கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று பயன் அடைந்து வரும் சந்தாதாரர்களின் விருப்பம் இல்லாமல் ஆப்ரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸை மாற்றினாலோ அல்லது அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவலை கூறி அரசு செட்டாப் பாக்ஸை நீக்கம் செய்து விட்டு தனியார் செட்டாப் பாக்ஸை மாற்றினாலோ உடனடியாக 04322-230700 என்ற தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். அரசு கேபிள் டி.வி தொடர்ந்து எவ்வித தடையுமின்றி செயல்படும்.

Top