logo
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் : ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்நிலைக்குழு- முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் : ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்நிலைக்குழு- முதல்வர் அறிவிப்பு

12/Jun/2021 04:09:13

சென்னை, ஜூன்:  தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து: ஆய்வு செய்து ஒரு மாத காலத்துகக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்றஉயர்நீதிமன்ற நீதிபதி  .கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுவதாக  முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கி நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக ாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை சரி செய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட வழிமுறைகள் அதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் .கே. இராஜன் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என  முதலமைச்சர்  மு.. ஸ்டாலின்ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி, ஓய்வு பெற்ற நீதியரசர்  .கே. இராஜன் அவர்கள் தலைமையில், கீழ்க்காணும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை முதலமைச்சர்  (10-6-2021)அமைத்து உத்தரவிட்டுள்ளார்:

நீதியரசர் .கே. இராஜன் (ஓய்வு)- தலைவராகவும்உறுப்பினர்களாக டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்டாக்டர் ஜவஹர் நேசன், அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை,

இயக்குநர்கல்வி இயக்ககம் ஆகியோரும் மற்றும் உறுப்பினர்- செயலர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக   கூடுதல் இயக்குநர்மருத்துவக் தல்வி இயக்ககம்தேர்வுக்குழு உறுப்பினர், செயலர்  நியமிக்கப்பட்டுளளனர்

இந்தக் குழு உரிய புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து தமிழகத்திலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைக் காத்திட தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும். இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Top