logo
தமிழகத்தில் கொவைட் தடுப்பூசிகள் வீணாக்கப்பட வில்லை: சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொவைட் தடுப்பூசிகள் வீணாக்கப்பட வில்லை: சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன்

27/Apr/2021 12:21:47

சென்னை, ஏப்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்படவில்லை என்றார் சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன்.

சென்னையில் செவ்வா.்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில: கோவாக்சின் குப்பியில்  10 பேருக்கு ஊசி போ

டலாம். முதல் முதலில் வந்த கோவாக்சின் குப்பி வரும்போது  20 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. வாராது வந்த  10 பேர் கடைசியாக வரும்போது அவர்களை திருப்பி அனுப்பமுடியாது. அந்தமாதிரி ஒரு சில பகுதிகளில் கடைசி குப்பியில் உள்ள மருந்தை மாலை 4 மணிக்கு மேல் பயன்படுத்த முடியாது. இதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் தடுப்பூசி வீணாக்கப் படுகிறது என சில செய்திகள் வருகின்றன.

அதே நேரத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்  மருந்து வீணாவதைசதவீதமாக குறைத்து விட்டோம். மே-1 -ஆம் தேதிக்குப் பிறகு மற்ற அனைவருக்கும் செலுத்தும் போது  இதை ஜீரோ இலக்கு கொண்டு வரப்படும்னவே, மீண்டும் மீண்டும் பொதுமக்கள் அடுத்த  ஒரு வாரத்துக்கு முழுமையாக கொரோனா தடுப்பு பணியில் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.   ஏற்கெனவே கொரோனா தொற்றுடன் யாராவது  வீட்டில் இருந்தால், அவரும் அவருடம் வீட்டில் இருப்பவர்கள்  முகக்கவசம் அணிய வேண்டும். இந்த முறை வீட்டுக்குள்ளே இருக்கும் ஏழெட்டு நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. தினசரி  1.20 லட்சம் பரிசோதனை செய்யப் படுகிறதுசென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை தினமும் 20 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. லாக்டவுன், ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாள்களில் பரிசோதனை மையம் திறந்திருந்தாலும்  மக்கள் எண்ணிக் கை குறைவதுதான் காரணம். பிப்ரவரி மாதக் கடைசியில் 50 ஆயிரம் பரிசோதனைகள்தான் செய்யப்பட்டன. எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் தமிழகத்தில் தினமும் 1.19 லட்சம் முதல் 1.20 லட்சம் வரை பரிசோதனை செய்யப்படுகிறது.

மாநகராட்சி, மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் மாதிரி எடுக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளனர். இது போல பல மாவட்டங்களிலும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனஇது போல அதிகமான மாதிரிகள் எடுக்கும் போது பரிசோதனை முடிவுகளும் அதிகரிக்கிறதுபரிசோதனை செய்ய அரசு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை.

 ரெம்டெவிசிர் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை. தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள மெடிக்கல் சர்வீஸ் கார்பரேஷன் உற்பத்தி செய்கிறதுஇந்நிலையில், சிலர்  குஜராத் போன்ற  அண்டை மாநிலங்களில் இருந்து ரெம்டெவிசிர் மருந்தை வாங்கி தமிழகத்தில் கள்ளச்சந்தையில் விற்கும் செய்தி அறிந்து மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இது போன்ற சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காக ரெம்டெவிசிர் மருந்து நியாயமாகத் தேவைப்படுபவர்களுக்கு கீழ்பாக்கம் மருத்துவமனையில் ஏற்கெனவே இன்சுலின் விநியோகிக்கக்கூடிய மையத்தில் தொடங்கினோம். அதில், கூடுதல் பிரிவுகள் தொடங்கப்படும். படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்இந்த புதுமையான முயற்சி இந்தியாவில் வேறு எங்குமே இல்லை.

 மேலும், ஒரு தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெறக்கூடியவர் ஆர்டி-. பிசிஆர் டெஸ்ட், ஆக்சிஜன் கருவியின் உதவியுடன் இருக்கிறார்  போன்ற 3 ஆவணங்களைக் கொடுத்தால் அந்த நோயாளியின் உறவினருக்கு நேரடியாக அந்த மருந்தை கொடுக்கக்கூடிய புரட்சிகரமான நடவடிக்கை தமிழகத்தில் மட்டும்தான் எடுக்கப்பட்டுள்ளது.

இது தேவைக்கு ஏற்றவாறு  விரிவுபடுத்தப்படும். அதே நேரத்தில் ரெம்டெவிசிர் மருந்தை மத்திய அரசு வார வாரம் ஒதுக்கீடு செய்து வருகிறது. இதுவரை 56 ஆயிரம் டோஸ்கள்  தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இதை தமிழ்நாடு மருந்துக்கழகம் தேவைக்கேற்ப கொள்முதல் செய்து வருகிறது. இதை அதிகரிக்க வேண்டுமென தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றார் ஜெ. ராதாகிருஷ்ணன்

 

Top