logo
ரோட்டரி சார்பில்  உலக இருதய தின விழப்புணர்வு சைக்கிள் பேரணி

ரோட்டரி சார்பில் உலக இருதய தின விழப்புணர்வு சைக்கிள் பேரணி

28/Sep/2020 02:26:09

புதுக்கோட்டை: உலக இருதய தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், மாமலர் மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு சைக்கிள்பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது 

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில்  சங்கத் தலைவர் டாக்டர்  க.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் எம்,.எஸ்.தண்டாயுதபாணி  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  சைக்கிள் பேரணி அண்ணா சிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி,  மேலராஜவீதி, அரசு பொது மருத்துவமனை வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. முன்னதாக மாமலர் மருத்துவமனை நிர்வாகியும் இருதய நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவருமான  கு.மாரிமுத்து வரவேற்றார்.

இதில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் கண. மோகன்ராஜ், பட்டயத் தலைவர் க.நைனாமுகம்மது, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சோ.பார்த்திபன், சைக்கிள் கழக மாவட்ட செயலாளர் அசோகன், சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் ப.செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்  ஏற்பாடுகளை மாமலர் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவர் க.கதிரவன் செய்திருந்தார். சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட மாமன்னர் கல்லூரி தரைப்படை மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் TN55 சைக்கிள் குழுவினர் உள்பட திரளானோர்  கலந்து கொண்டனர். இதையொட்டி அனைவரும் உறுதி ஏற்றுக்கொண்டனர்.

Top