logo
ஈரோட்டிலுள்ள தனியார் ஏ.டி.எம் மையத்தில்  எச்சரிக்கை மணி ஒலித்தலால் திருடர்கள் முயற்சி தோல்வி

ஈரோட்டிலுள்ள தனியார் ஏ.டி.எம் மையத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தலால் திருடர்கள் முயற்சி தோல்வி

16/Apr/2021 07:13:53

ஈரோடு, ஏப்: ஈரோடு டீச்சர்ஸ் காலனியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் எச்சரிக் கை மணி ஒலித்ததால் அங்கு மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சி தோல்வியில்  முடிந்தது.

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டீச்சர்ஸ் வானில் உள்ள தனியார் ஏ.டி.எம் மையத்தில் அதிகாலை 2 மணி அளவில்  சில மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ஏ.டி.எம் மையத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள் ளனர்.அதற்காக அவர்கள் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்யும் போது ஏ.டி.எம். மையத் தில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை மணி திடீரென ஒலித்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.  எச்சரிக்கை மணி  சப்தத்தை  கேட்ட  அப்பகுதி மக்கள் சிலர் ஏ.டி.எம் மையத்திற்கு வந்தபோது   கொள்ளை முயற்சி நடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வங்கி மேலாளருக்கும், சூரம்பட்டி  போலீஸாருக்கும்  தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து  சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீஸார்  ஏ.டி.எம் மையத் தில் பொருத்தப்பட்டுள்ள  சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.  இந்தக் கொள்ளை  முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Top