logo
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டில் புகுந்த சிறுத்தைப்புலி தாக்கி 3 பேர் காயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டில் புகுந்த சிறுத்தைப்புலி தாக்கி 3 பேர் காயம்

15/Apr/2021 05:04:44

குடியாத்தம், ஏப்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே எர்த் தாங்கல் கலர் பாளையம் கிராமத்தில் ஒரு வீட்டில்   நள்ளிரவில் புகுந்த சிறுத்தைப்புலி அங்கு தூங்கிக் கொண்டிருந்த 3 பேரை தாக்கியதில் பலத்த காயமடைந்தனர்.

எர்தாங்கல் கலர்பாளையம் கிராமத்துக்குள் நள்ளிரவு  1 மணியளவில் 5 வயது மதிக்கதக்க சிறுத்தைபுலி ஒன்று இறை மற்றும் தண்ணீர் தேடியும்புகுந்தது.

 அப்போது, காற்று வாங்குவதற்காக கதவைத்திறந்து வைத்திருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்தவர்களை எதிர்பாராதவிதமாகத்தாக்கியது இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்களது அலறல் சப்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர் களை மீட்ட பின்னர் அந்த சிறுத்தையை வீட்டினுள்ளே வைத்து  பூட்டினர். பாதிக்கப்பட்ட 3 பேரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கிராமத்துக்குள் சிறுத்தைப்புலி புகுந்த தகவலறிந்த பொதுமக்கள் வீட்டின் முன்னே திரண்டதால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

 தகவல்அறிந்து வந்த வனத்துறையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர் ஓசூரிலிருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர் மூலம்  வீட்டினுள் இருந்த சிறுத்தைக்கு பிளாஸ்டிக் பைப் வழியாக மயக்க ஊசி  செலுத்தப்பட்டது.

இதையடுத்து  20 நிமிடங்களில் அந்த சிறுத்தை புலி மயங்கி விழுந்தது. பின்னர் பாதுகாப்புடன் அதன் வாயை ஒயர்கூடையால் கட்டிய பின்னர்வெளியே  தூக்கி வரப்பட்டு அங்கு தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் அடைக்கப்பட்டது.

நள்ளிரவு முதல் நீடித்த இந்த மீட்பு போராட்டம் மதியம் 12.10 நிலவியது. மயங்கிய நிலையில் இருந்த சிறுத்தைப்புலிக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக  பேர்ணாம்பட்டு வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

Top