logo
தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

01/Apr/2021 12:05:14

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம்  தேதி நடைபெறுவதையொட்டி  வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்கள் சொந்த ஊருக்குச்சென்று வாக்களிக்க வசதியாக  அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது

 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்  (6.4.2021) தங்களது வாக்குகளை உரிய வாக்குமையத்தில் பதிவுசெய்ய  வசதியாக  அரசு போக்குவரத்துக்கழகம்  (கும்பகோணம்)   சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர்பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணிமயிலாடுதுறைதிருவாரூர்திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய  ஊர்களுக்கு  வருகிற  4, 5   ஆகிய இரு நாள்கள்  இயக்கப்பட உள்ளது.

திருச்சியிலிருந்து  தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கு  மதுரைகோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய  ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உள்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு  1.4.2021 முதல்   8.4.2021  வரைஅனைத்து  முக்கிய நகரங்களிலிருந்து  பயணிகளின் தேவைக்கேற்ப  பேருந்துகள் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ஏப்4 முதல் 5 வரை  சென்னையிலிருந்து பொதுமக்கள்  எளிதாக  பயணம்  செய்யும்  வகையில்தற்காலிக  பேருந்து நிலையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. கும்பகோணம்தஞ்சாவூர்பட்டுக்கோட்டைபேராவூரணி, மன்னார்குடி,    நன்னிலம் மற்றும் திருவையாறு செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம்   அறிஞர்  அண்ணா  பேருந்து  நிலையத்திலிருந்தும். கரூர்திருச்சிஅரியலூர்செந்துறைஜெயங்கொண்டம்

  புதுக்கோட்டை அறந்தாங்கிராமநாதபுரம்ராமேஸ்வரம்பரமக்குடிமதுரைகமுதிமுதுகுளத்தூர்நாகப்பட்டிணம்வேளாங்கண்ணி,   மயிலாடுதுறைசீர்காழிதிருவாரூர்,   திருத்துறைப்பூண்டி,   வேதாரண்யம்  தட பேருந்துகள்  கோயம்பேடு   பேருந்து  நிலையத்திலிருந்து  இயக்கப்பட  உள்ளது 

மேலும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 6.4.2021, 7.4.2021, 8.4.2021 ஆகிய   நாட்களில்  சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  என்றும்  அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Top