logo
திருமயம்  தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து  பிரசாரம்

திருமயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து பிரசாரம்

21/Mar/2021 12:07:39

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்து  பேரையூரில் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கட்சி வேட்பாளர் பிகே வைரமுத்து பேரையூர் கிராமத்தில் பொதுமக்களிடம் தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்ட உதவிகள் எடுத்துக் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி. தமிழ் மாநில காங்கிரஸ். பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


                                                                               

        


Top