logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

15/Mar/2021 08:54:39

புதுக்கோட்டை மாவட்டத்தில்  6 தொகுதிகளிலும் போட்டியிடும்  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை  பிரசாரம் மேற்கொள்கிறார்.


சேலத்திலிருந்து  வரும் முதல்வர் பழனிசாமி முசிறி, தோகமலை பகுதிகளில் காலை 7.30 மணிக்கு  தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். தொடர்ந்து காலை  9 மணியளவில்  விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சி. விஜயபாஸ்கருக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து  10.30 மணியளவில் புதுக்கோட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளர் வீ.ஆர். கார்த்திக்தொண்டைமானுக்கு வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து  நண்பகல் 12 மணியளவில் திருமயம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்துவை ஆதரித்து வாக்கு சேகரித்து பிரசாரம் செய்கிறார்.

அறந்தாங்கி தொகுதியின் அதிமுக வேட்பாளர் மு. ராஜநாயகத்தை ஆதரித்து பிற்பகல் 1.15 மணியளவிலும், ஆலங்குடி வேட்பாளர் தர்மதங்கவேலை ஆதரித்து ஆவணம் கைகாட்டியில்  பிற்பகல் 3 மணிக்கும், கந்தர்வகோட்டை அதிமுக வேட்பாளர் ஜெயபாரதியை ஆதரித்து இரவு 7 மணியளவில் வாக்குகள் சேகரித்து முதல்வர் பிரசாரம் மேற்கொள்கிறார் என அதிமுக தலைமைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Top