logo

ஜம்மு&காஷ்மீரில் மீண்டும் இணையச் சேவை: அரசு அறிவிப்பு

05/Mar/2020 06:25:15

ஜம்மு காஷ்மீரில்இணையச்சேவை மற்றும் சமூக வலைதளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370- கடந்த ஆண்டு ஆக.,5- ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதனையடுத்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக இணையசேவை, அலைபேசி, தொலைபேசி உள்ளிட்ட தொலைத் தொடர்புகள்  முற்றிலும் முடக்கப்பட்டன. பின்னர் ஜனவரியில்  காஷ்மீர் பள்ளத்தாக்கில் சில இடங்களில்  மட்டும் இணையச் சேவை கொண்டுவரப்பட்டது.  அதிலும், சமூக வலைதளங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் அரசால் அனுமதிக்கப்பட்ட இணையதளங்கள், வங்கி சேவைகளுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. தற்போது 2 ஜி சேவை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 4ஜி சேவை மீதான தடை தொடருகிறது. இந்த உத்தரவு மார்ச் 17ம்  தேதி வரை அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Top