logo
விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெறக் கோரி சாலை மறியல்: புதுக்கோட்டையில் 600 பேர் கைது

விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெறக் கோரி சாலை மறியல்: புதுக்கோட்டையில் 600 பேர் கைது

25/Sep/2020 03:15:56

புதுக்கோட்டை: மத்திய அரசின் விவசாயிகளுக்கு விரோதமான அவசர சட்டங்களை திரும்பப்பெறக்கோரி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் பங்கற்ற 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டங்களில் அத்தியவாசியப் பொருட்கள் அவசரச் சட்டம், வேளாண் விளைபெருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம், மின்சார திருத்தச் சட்டம் ஆகிய விவசாயிகளை ஒடுக்கும் கார்ப்பரேட் ஆதரவுச் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

புதுக்கோட்டை பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.சி.சோமையா, ஒன்றியச் செயலர் எம்.வீரப்பன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் சட்டப்பேரவை , உறுப்பினர்கள்  பெரியண்ணன்அரசு, எஸ்.ரகுபதி,  திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலர் மு.மாதவன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர்,  நிர்வாகிகள் சி.அன்புமணவாளன், எம்.ஜியாவுதீன், சி.அடைக்கலசாமி, சி.ஜீவானந்தம், ஏ.எல்.ராசு உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கந்தர்வகோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா; ஏ.ராமையன், அம்பலராஜ், நடராஜன் ஆகியோர்  தலைமை வகித்தனர்.  நிர்வாகிகள் உ.அரசப்பன், கே.சித்திரைவேல், ஜி.பன்னீர்செல்வம், இளையராஜா, தனபால், ராஜேந்திரன், கலியபெருமாள், வளத்தான், ஜோதிவேல் மற்றும் 4 பெண்கள் உட்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

கறம்பக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எம்.மாதவன், ஆரோக்கியசாமி, விஜயன் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யயூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினா; வி.துரைச்சந்திரன், ஒன்றியச் செயலர்கள் த.அன்பழகன், எம்.பாலசுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் ஜேசுராஜ், ரெங்கசாமி உள்பட 72 பேர்  கைது செய்யப்பட்டனர்.

பொன்னமராவதியில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் பி.ராமசாமி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் என்.பக்ருதீன், நல்லதம்பி, குமார், பிச்சையம்மாள், பிச்சை, சவுந்தரராஜன், சிங்காரம், சாத்தப்பன் மற்றும் 39 பெண்கள் உட்பட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலங்குடியில் சட்டமன்ற உறுப்பினர்  சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் திமுக ஒன்றியச் செயலர் த.தங்கமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் எல்.வடிவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் சொர்ணக்குமார், சிபிஐ(எம்எல்) சார்பில் பாஸ்கர், காங்கிரஸ் சார்பில் அற்புதராஜ், மதிமுக சார்பில் சுரேஷ், திராவிடர் கழகம் சார்பில் ராவணன் மற்றும் 11 பெண்கள் உட்பட 63 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அன்னவாசலில் ஆர்.சி.ரெங்கசாமி, சி.நல்லையா தலைமையில் விவசாயதொழிலாளர் சங்க மாவட்டப் பொருளர் கே.சண்முகம், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் எம்.ஆர்.சுப்பையா, பி.ராமன் உள்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர். கீரனூரில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர்  எஸ்.பீமராஜ், சத்தியமூர்த்தி, வளனரசு ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலர் ஏ.ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலர் கே.தங்கவேல், ரெங்கராஜ் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.


Top