logo
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி

25/Sep/2020 01:17:53

புதுதில்லி:

பிகார் சட்டப்பேரவைக்கு முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3-ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் 7-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29 -ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, தேர்தல் தேதி குறித்து அறிவிக்க, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் கரோனா பெருந்தொற்று காரணமாக, இதுவரை 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி மையம் என்பதை மாற்றி, தற்போது 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். பீகாரில் ஒட்டுமொத்தமாக 7.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் 38 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். பெரும்பாலான தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. பிகாரில் ஒட்டுமொத்தமாக 7.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பிகாரில் உள்ள 243 தொகுதிகளில் 38 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். பெரும்பாலான தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.   80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வழக்கமாக மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

 


Top