logo
ஈரோட்டில்  வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ரத்தக் கையெழுத்திட்டு நூதனப் போராட்டம்

ஈரோட்டில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ரத்தக் கையெழுத்திட்டு நூதனப் போராட்டம்

16/Feb/2021 10:18:01


ஈரோடு, பிப்: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும்.கிராம உதவியாளருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். பதவி உயர்வு பெற்ற கிராம உதவியாளர்கள் ஓய்வூதிய குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் ரத்தக் கையெழுத்திட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை  ஈரோடு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் ரத்தக் கையெழுத்திட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்த நூதனப் போராட்டம் அனைத்து வட்டார அலுவலகத்திலும் நடந்து வருகிறது. இந்த போராட்டம் வரும் 19-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் வரும் 24-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

Top