logo
தை அமாவாசை: ஈரோடு பவானி கூடுதுறை, கொடுமுடியில்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

தை அமாவாசை: ஈரோடு பவானி கூடுதுறை, கொடுமுடியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

11/Feb/2021 08:51:49

ஈரோடு, பிப்: தை அமாவாசையை முன்னிட்டு ஈரோடு, பவானி கூடுதுறை, கொடுமுடி ஆற்றங்கரைகளில் திரளான மக்கள் தங்களது  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.


அமாவாசை நாள்களில் இந்துக்கள் தங்கள் குடும்பங்களில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் மட்டும் திதி கொடுப்பது வழக்கம். இதில் தமிழ் மாதத்தில் வரும் தை மாத அமாவாசை நாளான வியாழக்கிழமை  ஏராளமான மக்கள் ஈரோடு பவானி கூடுதுறை ,கொடுமுடி,  ஈரோடு காவிரி ஆற்றங்கரைகளில்  மக்கள் திரண்டு முன்னோர்களுக்கு திதி (தர்ப்பணம்) கொடுத்து ஆற்றில் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டு செல்வது வழக்கம்.


கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆடி புரட்டாசி மாதங்களில் வந்த அமாவாசைகளுக்கு 6  நாள்களுக்குடன் கூடிய வழிபாட்டு தலங்களில் மக்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் வீடுகளிலேயே எளிமையாக முன்னோர்களை வழிபட்டனர்.

 தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையொட்டி தை அமாவாசை நாளான  வியாழக்கிழமை(பிப்.11) பவானி கூடுதுறை, கொடுமுடி, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் மக்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

 மூன்று ஆறுகள் ஒன்றாக சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் தை அமாவாசை நாளான வியாழக்கிழமை அதிகாலை முதலே கடும் குளிரையும் வலியை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மக்கள் வரத்தொடங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானி கூடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பவானி கூடுதுறை கோவில் முகக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தினர். பவானி கூடுதுறையில் உள்ள பரிகாரம் மண்டபங்கள் அனைத்தும் நிரம்பி  வழிந்தன. 

அதைத்தொடர்ந்து அருகில் உள்ள காலி இடங்களில் முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து தர்ப்பணம் திதி கொடுத்து பவானி ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர்.  பெண்களுக்கு ஆண்களுக்கு தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு அவர்கள் நீராடி வழிபட்டனர். போலீசார் ஒலிபெருக்கி மூலம் தங்களது உடமைகள் நகைகளை பாதுகாப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டுமென அறிவித்தனர்.

 மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் இருந்தனர். 108 ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் இருந்தது. இதைப்போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில்  காலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

 இதேபோல் காலிங்கராயன் வாய்க்கால் பகுதிகளிலும் பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டு முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து நீராடி வழிபட்டனர். இதையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றிலும் தை அமாவாசையையொட்டி பக்தர்கள் புனித நீராட நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. கொடுமுடி காவிரி ஆற்றில்  அதிகாலை முதலே நூற்றுக்கணக் கான மக்கள் வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காவிரியில் புனித நீராடினர். இதையடுத்து கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்தனர்.

Top