logo
போர்க்களமான தலைநகர் தில்லி: நாடாளுமன்றக்கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமல்

போர்க்களமான தலைநகர் தில்லி: நாடாளுமன்றக்கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமல்

28/Jan/2021 04:41:26

தில்லி, ஜன: தலைநகர் தில்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து  ஜன.27 நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் 11 கட்டமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் திட்டமிட்டப்படி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் தடுப்புகளைமீறி தில்லிக்குள் விவசாயிகள் நுழைந்த நிலையில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர்.இதனால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளுஏற்பட்டது.

இதனால், தில்லியில் வன்முறை வெடித்தது. மேலும், தில்லி செங்கோட்டையை கைப்பற்றி விவசாயிகள் அங்கு விவசாய

சங்கக் கொடியை ஏற்றி வைத்தனர். போராட்டத்தின் தீவிரத்தை தடுக்கும் விதமாக தில்லியின் முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால், தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

Top