logo
எல்லை அறிவிப்பு பெயர் பலகை பிரச்னைக்கு தீர்வு: ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

எல்லை அறிவிப்பு பெயர் பலகை பிரச்னைக்கு தீர்வு: ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

25/Jan/2021 05:58:38

ஈரோடு: கர்நாடக எல்லைக்குள் இருந்த தமிழக அரசின் எல்லை அறிவிப்பு பெயர் பலகைகளை தமிழக எல்லைக்கு மாற்றி வைத்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது.

தமிழகம் கர்நாடக எல்லையில் ராமபுரம் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக நெடுஞ்சாலை துறையின் தமிழ் எல்லை அறிவிப்பு பலகையை கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் கடந்த 10 -ஆம் தேதி  சேதப்படுத்தினர்.

அதேபோன்று எத்திகட்டை பகுதியில் உள்ள தமிழக அறிவிப்பு பலகையையும் கன்னட அமைப்பினர் சேதப்படுத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து வாட்டாள் நாகராஜ் மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாநில எல்லை அறிவிப்பு பெயர்பலகை வைக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்ய ஈரோடு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து நில அளவை மற்றும் வருவாய்த்துறையினர் எல்லைக்கோடு அளவீடு செய்து கர்நாடக எல்லைக்குள் இருந்த தமிழக அரசின் பெயர்பலகையை அகற்றி தமிழக பகுதியான ராமபுரம், பாரதிபுரம், கும்பாரகுண்டி, எத்திகட்டை, அருள்வாடி உள்ளிட்ட 8 இடங்களில் நடப்பட்டது.இதையடுத்து கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எழுப்பிய எல்லைப் பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்து தீர்வு கண்டுள்ளது.


Top