logo
வாக்குச் சாவடி அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்: மத்திய அமைச்சா் ஹா்ஷ வா்தன்

வாக்குச் சாவடி அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்: மத்திய அமைச்சா் ஹா்ஷ வா்தன்

03/Jan/2021 09:17:08

புதுதில்லி: தேர்தல் வாக்குச் சாவடி அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை, 96,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் கரோனா தடுப்பூசியை சீராக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படிதமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 719 மாவட்டங்களில் 285 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

மகாராஷ்டிரம், கேரளம், குஜராத் மாநிலங்களில் தலா 4 மாவட்டங்களிலும், கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் தலா 5 மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் 7 மாவட்டங்களிலும் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

தில்லியில் குரு தேக் பகதூா் மருத்துவமனை, தில்லி தரியாகஞ்ச் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய அமைச்சா் ஹா்ஷ வா்தன் பாா்வையிட்டாா்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்டிராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கரோனா தடுப்பூசியை உருவாக்கியது. அந்த மருந்தை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது. இந்த மருந்தை அவசரகால தேவைக்குப் பயன்படுத்துவதற்கு வெள்ளிக்கிழமை இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணா் குழு ஒப்புதல் அளித்தது. அதன் மூலம், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் இறுதி அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதேபோன்று பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர்வுடன் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு நிபுணர் குழு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. உருமாற்றம் கொண்ட கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரத் தேவைக்கு மட்டும் அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் நிபுணர் குழு பரிந்துரைத்தது.

இதனிடையே கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியின் 3 ஆம் கட்ட பரிசோதனைக்கும் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நிபுணர் குழு ஒப்புதலை அடுத்து, கோவாக்சின் மருந்தை மூன்றவாது கட்டமாக 26 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தவும், இதற்காக 23 தன்னார்வலர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாரத் பயோடேக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியான கோவாக்சினை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய மருத்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், தேர்தல் வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது .

இதுவரை, 719 மாவட்டங்களில் 57 ஆயிரம் பேர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 96 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக

நாட்டில் முதல் கட்டமாக, ஒரு கோடி மருத்துவப் பணியாளா்கள், 2 கோடி முன்கள பணியாளா்கள் என மொத்தம் 3 கோடி பேர்களுக்கு இலவச தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்டமாக ஜூலை மாதத்திற்குள் 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் உள்ளிட்ட 27 கோடி முன்னுரிமை பயனாளர்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடுவது என்பது குறித்த விரிவான நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் தடுப்பூசி தொடர்பான தவறான வழிகாட்டுதல்களையும் வசந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர் ஹர்ஷ் வர்தன்தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த விதிமுறைகளில் அரசு எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ளாது என்று கூறினார்.

Top