logo
அரசு பார்வையற்றோர் நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

அரசு பார்வையற்றோர் நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

23/Sep/2020 01:54:03

புதுக்கோட்டையிலுள்ள  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  வெளியிட்ட தகவல்:

உங்கள் அல்லது உங்கள் அருகில் உள்ள பள்ளிப் பருவ மாணவர்கள் கண்பார்வையில் குறைபாடு உடையவர்களாக இருந்தால், இவர்களுக்கான பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளி  தமிழக அரசால் புதுக்கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி சார்ந்த அனைத்தும் முற்றிலும் இலவசம்.

பள்ளியின் சிறப்புகள் இலவச விடுதியுடன் கூடிய சிறப்புப்பள்ளி, கற்பிக்க சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், குழந்தைகளை பராமரிக்க விடுதிக்காப்பாளர், சமையலர் மற்றும் ஆயா ஆகியோர் பணியாற்றுகிறார்கள். உணவு, உடை, தங்கும் வசதி முற்றிலும் இலவசம். ஆண்டுக்கு ஒரு முறை கல்விச்சுற்றுலா, சிறப்பு கல்வி உதவித்தொகை பெறலாம்.

மேலும் மாணவர்களை பள்ளியில் சேர்க்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தலைமை ஆசிரியர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில், புதிய பேருந்து நிலையம், புதுக்கோட்டை. 622001. அல்லது தலைமை ஆசிரியர் ப.வடிவேலன்: 04322 226452, 9080855199, 9840272383 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Top