logo
புத்தாண்டு  (2021) .. எந்தெந்த நாடுகளில் எப்போது பிறக்கிறது..

புத்தாண்டு (2021) .. எந்தெந்த நாடுகளில் எப்போது பிறக்கிறது..

01/Jan/2021 02:37:40

இருள் அகலட்டும்... கவலைகள் நீங்கட்டும்...  இந்தியா தனது புத்தாண்டைநள்ளிரவு 12 மணிக்கு  கோலாகலத்துடன் கொண்டாடியது.  நாட்டு மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளனர்.

 2021 புத்தாண்டு.. எந்தெந்த நாடுகளில் எப்போது  கொண்டாடப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.  கான்பெரா: 2021 புத்தாண்டு முதலில் பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா கிரிப்பட்டியில் பிறந்தது, இதையடுத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது. ரஷ்யா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இந்தியாவில்  நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. உலகம் முழுவதும் பெரிய கஷ்டங்களை கொடுத்தது 2020-ஆம் ஆண்டு. அந்த ஆண்டு முடிந்து, 2021 எப்போது பிறக்கும் என்று உலக மக்கள் அனைவரும் இறைவனை வேண்டிக் கொண்டனர்.

இந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பசிபிக் தீவு நாடுகளான சமோவா, கிரிப்பட்டியில் புத்தாண்டு பிறந்தது. இது உலகின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகள் ஆகும். பெரிய நாடுகள் என்ற வகையில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. 5.30 மணிக்கு ரஷ்யாவின் ஒரு பகுதியில் புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன், கான்பரா உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டு பிறந்தது. 

இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும், இரவு 11.30 மணிக்கு இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறக்கும்.   இந்திய நேரப்படி இன்று காலை, 5.30 மணிக்கு இங்கிலாந்தில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. ஜனவரி 1-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்காவில் புத்தாண்டு இன்று மாலை 5.30 மணிக்கு பிறக்கிறது.. புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக பேக்கர் தீவு இருக்கிறது. 

Top