logo
ஈரோடு மாவட்டத்திலுள்ள  5 காவல் துணைக் கோட்டங்களில்   வருடாந்திர காவலர் உடற்பயிற்சி   ஆய்வு

ஈரோடு மாவட்டத்திலுள்ள 5 காவல் துணைக் கோட்டங்களில் வருடாந்திர காவலர் உடற்பயிற்சி ஆய்வு

26/Dec/2020 06:42:18

ஈரோடு, டிச: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு டவுன், பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம், கோபி ஆகிய5 காவல் உள்கோட்டங்களில்  800 - க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான வருடாந்திர  கவாத்து(காவலர் உடற்பயிற்சி) ஆய்வு  அந்தந்த  உள் கோட்டங்களில்  நடைபெற்றது. 

ஈரோடு உள் கோட்டத்துக்கு உள்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கான வருடாந்திர கவாத்து ஆய்வு சனிக்கிழமை  ஈரோடு சி.எஸ்.ஐ பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் 147 போலீசார் பங்கேற்றனர். முதலில் போலீசாருக்கான அணிவகுப்பு நடந்தது. பின்னர் போலீசார் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஷீ, பெல்ட், சீருடை, லத்தி, தார்ப் பாய் போன்றவற்றை வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர்.  இதனை டவுன் டிஎஸ்பி ராஜு தலைமையில் போலீசார் பார்வையிட்டனர்.

பின்னர் ஒவ்வொரு போலீசாரிடமும் டவுன் டிஎஸ்பி ராஜு அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு வழங்கப்படும் தினப்படி, சிறப்பு படி முறையாக வருகிறதா என்று கேட்டறிந்தார். சில போலீசார் தங்களது குறைகள் குறித்து மனுவாக டவுன் டிஎஸ்பி இடம் கொடுத்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் அவர் எஸ்.பி.யிடம் வழங்குவார். இதேபோல் இன்று வருடாந்திர கவாத்து ஆய்வு நடைபெற்றது. 

Top