logo
இந்திய யூத் ஹாஸ்டல் சங்கத்தின் மாநிலத் துணைத்  தலைவராக ஈரோடு டாக்டர் ஆ.ராஜா தேர்வு

இந்திய யூத் ஹாஸ்டல் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக ஈரோடு டாக்டர் ஆ.ராஜா தேர்வு

23/Sep/2020 09:59:22

யூத் ஹாஸ்டல்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர்  பஞ்சாபகேசன் தலைமையில் சென்னை ஜெய்கோபால் கொரைடா ஹிந்து வித்யாலயா பள்ளியில்  நடைபெற்றது .  இதில் நடைபெற்ற தேர்தலில் தலைவராக வெங்கட் நாராயணன் மற்றும் செயலராக விவேகானந்தன், பொருளாளராக ஜீவா,  துணைத்தலைவர்களாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் 18 பள்ளிகளில் தாளாளராக இருக்கும் . கிரிஜா சேஷாத்திரி மற்றும் ஈரோட்டை சேர்ந்த டாக்டர் .ஆ . ராஜா ஆகியோர் தேர்ந்தேடுக்கப்பட்டனர். 

ஈரோடு ராஜா கலைமகள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் இணைச் செயலராகவும் உள்ளார். நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி யூத் ஹாஸ்டல் 7 நபர்கள் கொண்ட மேலாண்மைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்  மேலும் 1998 முதல் புது டில்லியில் யூத் ஹாஸ்டெலில் தேசிய கவுன்சில் உறுப்பினராக உள்ளார். இவர், யூத் ஹாஸ்டல் தேர்தல் அலுவலராக கோவா, புதுவை, கேரளா, ஒரிசா, தெலங்கானா உட்பட பல மாநிலங்களில் பணியாற்றி உள்ளார். யூத் ஹாஸ்டல் மூலம் பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். 2010 முதல் கர்நாடக அரசு பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் முகாம் நடத்த அனுமதி சான்றிதழ் வழங்கி உள்ளது. இவர் இரண்டாம் முறையாக போட்டியின்றி ராஜா மாநில துணைத் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.

   பதவியேற்ற பின் அவர் பேசுகையில் கொரோனா காலத்திற்குப் பின் மாணவ மாணவியர்களை இமயமலை மலைப்பயணத்திற்கு அனுப்ப முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் . பின் காஷ்மீர் பகுதியில் உள்ள லேஹ் பகுதியில் யூத் ஹாஸ்டலின் சொந்த கட்டடத்தில் வருடத்திற்கு 8 மாதங்கள் குடும்ப முகாம் மற்றும் பைக் பயணம் நடத்த ஏற்பாடு  செய்யப்படும் என்றார். .மேலும் ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள யூத் ஹாஸ்டலில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார். இத்தகவலை யூத் ஹாஸ்டல் செயலர் விவேகானந்தன் தெரிவித்தார்.                                                                          

        


Top