logo
 சில்லறை வணிகத்தில் அன்னிய- உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை:நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்கம் தீர்மானம்.

சில்லறை வணிகத்தில் அன்னிய- உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை:நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்கம் தீர்மானம்.

25/Dec/2020 12:32:52

மதுரை, டிச:  மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இருவத்தி ஒன்பதாவது பொதுக்குழு கூட்டம் நடந்தது . சங்க தலைவர் மாதவன் தலைமை வகித்தார். செயலாளர் வினோத் கண்ணா, பொருளாளர் வெங்கடசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாட்டில் சில்லறை வணிகம் ஆண்டுக்கு 8 முதல் 10 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது இதனால் பன்னாட்டு நிறுவனத்தினர் சில்லரை வணிகத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டால் ஏற்கெனவே உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏராளமானவர்கள் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் கொரோனா காலத்தில் எந்த ஒரு விநியோகஸ்தர்களும் மொத்த சில்லறை வணிகர்கள் தங்களின் தொழிலை லாபகரமாக செய்ய முடியவில்லை.

 இதனால் ஜிஎஸ்டி குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய முடியவில்லை .இதனால் அபராதம் செலுத்த நேரிட்டது எனவே 2020- 21 -ஆம் ஆண்டில் தாமதத்திற்காக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி அபராத தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்யவேண்டும். சில்லரை வணிகத்தில் அன்னிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 


Top