logo
குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

21/Dec/2020 09:40:43

புவனேஸ்வர் : குஜராத் மாநிலம் சூரத் செல்லும் சிறப்பு பூரி - துர்க் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் ஒன்று நேற்று அதிகாலை 1.55 மணியளவில் ஒடிசா மாநிலலம் சம்பல்பூரில் உள்ள ஹதிபரி நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது. ஹதிபரி - மானேஸ்வர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் சென்று கொண்டிருந்த போது வயதான யானை ஒன்று ரயில் பாதையை கடக்க முயன்றது. இருந்தும், யானை மீது ரயில் லேசாக மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ச்சிடைந்த லோகோ பைலட், ரயிலை உடனடியாக பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். ஆனால், ரயிலின் இன்ஜின் பகுதியின் சக்கரங்கள் தடம் புரண்டன.

இந்த விபத்தினால் பயணிகள் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இயந்திரத்தின் ஆறு சக்கரங்கள் மட்டுமே தடம் புரண்டதால் பைலட் மற்றும் உதவி பைலட் ஆகிய இருவரும் பாதுகாப்பாக உள்ளதாக கிழக்கு ரயில்வே (ஈசிஓஆர்) வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவம் குறித்து அந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘ஹதிபரியிலிருந்து அதிகாலை 1.55 மணிக்கு ரயில் புறப்பட்டது. யானை வழித்தடம் என்பதால், 50 கி.மீ வேகத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது.

யானை ஒன்று வழித்தடத்தில் நெருங்கியதை அறிந்த பைலட் அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தினார். சில நொடிகள் தாமதமாக பிரேக் போட்டதால் சக்கரங்கள் தடம் புரண்டன. ரெயராகோலில் இருந்து அனுப்பப்பட்ட புதிய இஞ்சின், விபத்தில் சிக்கிய ரயிலில் பொருத்தப்பட்டு வழக்கம் போல் ரயில் இயக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய யானை சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்து, பின்னர் காட்டுக்குள் சென்றுவிட்டது’ என்று தெரிவித்தன. 


Top