logo
 குறு, சிறு  மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முத்திரை தீர்வை ரத்து, பதிவுக் கட்டண குறைப்பு சலுகை:  31.3.2021 வரை நீட்டிப்பு

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முத்திரை தீர்வை ரத்து, பதிவுக் கட்டண குறைப்பு சலுகை: 31.3.2021 வரை நீட்டிப்பு

19/Dec/2020 05:20:59

புதுக்கோட்டை,டிச: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முத்திரை தீர்வை ரத்து, பதிவுக் கட்டண குறைப்பு சலுகை 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: 

மத்திய அரசின் கடன் திட்டத்தின் கீழ் தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முத்திரைத் தீர்வை ரத்து பதிவுக் கட்டண குறைப்பு சலுகையை 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் 

தமிழக வணிகவரி பதிவுத் துறை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் விரிவான ஆய்வு அடிப்படையில் சுயசார்பு இந்தியா (ஆத்ம நிர்பா பாரத்) திட்டத்தின் கீழ் 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான பிணை ஆவணங்கள் தொடர்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்யும் போது செலுத்த வேண்டிய முத்திரை வரியில் இருந்து விலக்கு அளிக்கும் உத்தரவை பதிவுத் துறை பிறப்பித்துள்ளது. 

மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்கள், கூடுதல் கடன்களுக்கான தலைப்பு ஆவணங்கள் வைப்பு தொடா;பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்யும்போது செலுத்த வேண்டிய பதிவு கட்டணத்தை ஒரு சதவீதத்தில் இருந்து 0.3 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசின் சொத்து பிணையில்லா அவசரகால கூடுதல் கடன் திட்டத்தில் 3,09,312 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.11,538.69 கோடி கடன் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்து. மீதமுள்ள தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் இத் திட்டம் முடிவடையும் காலம் வரை பயனடையலாம்.

தற்போது மத்திய அரசு இத்திட்டத்தை 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பதிவுக் கட்டணம் குறைப்பால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஒவ்வொருமுறை கடன் கூடுதல் கடன்பெறும் போதும் பயன்பெற முடியும்.

இந்த உத்தரவுக்கு முன்பே பதிவுத் துறை அபராதம் இல்லாமல் பிணை ஆவணங்கள் பதிவு செய்யும் காலக்கெடுவை 4 மாதங்களில் இருந்து 8 மாதங்களுக்கு 2021 மாh;ச் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களை பெற, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், புதுக்கோட்டை- 622 005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04322-221794 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அணுகலாம்.

Top