logo
நிவர் புயல்: கோட்டைப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி ஆய்வு

நிவர் புயல்: கோட்டைப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி ஆய்வு

24/Nov/2020 09:14:45

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கடலோரப் பகுதியில் புயல் முன்னெச்சரிக்கையொட்டி மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி விசைப்படகு துறைமுகத்தில் ஆய்வு செய்தும் பேரிடர் மீட்பு மையக் கட்டிடத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ முகாமை ஆய்வு செய்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலோரப் பகுதிகளை பொருத்தவரை 10 புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் தயார் நிலையில் உள்ளன. அதில் குடிநீர் உணவு மருத்துவ வசதிகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் உள்ளவர்களை அழைத்து பாதுகாப்பாக வைக்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாயில்   இருந்து வரக்கூடிய தண்ணீர் கடலுக்கு சென்றடைய எந்த ஒரு தடையும் இல்லாமல்  வரத்து வாய்க்கால் அனைத்தும் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை 1077 2207  இலவச தொலைபேசி எண் மூலம் 24 நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்  இ.ஏ.ரெத்தின சபாபதி,மீன்வளத்துறை அதிகாரிகள்,மீனவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Top