logo
கொரோனா தடுப்பூசியின் 2 டோஸுக்கான விலை ரூ. 1000...

கொரோனா தடுப்பூசியின் 2 டோஸுக்கான விலை ரூ. 1000...

20/Nov/2020 06:55:10

புது தில்லி: கொரோனாவிற்கான தடுப்பூசி பொதுமக்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கிடைக்கலாம் என்று கூறப்படும் நிலையில், இரண்டு டோஸ் கொரோனா மருந்துக்கான விலைரூ.1000 என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உலகின் பல்வேறு நாடுகளும், தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒரு சில நாடுகளில் தடுப்பூசியின் பரிசோதனை இறுதிகட்டத்தில் உள்ளது. இதனால் அடுத்த ஆண்டில் கொரோனாவிற்கான தடுப்பூசி கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா இது குறித்து கூறும்போது, எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் 3-4 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியர்களுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும், அவர் தற்போது வேக்சின் உற்பத்தி வேகமாக நடந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் வேக்சின் கிடைக்க வாய்ப்பு இல்லை.

எல்லாம் திட்டப்படி நடந்தால் அடுத்த வரும் பிப்ரவரி மாதத்திற்குள் வேக்சின் கிடைத்துவிடும். பின் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மக்களுக்கு வேக்சின் கொடுக்க முடியும். தொடக்கத்தில் வயதானவர்கள், கர்ப்பிணிகள், முன் கள பணியாளர்கள் ஆகியோருக்கு வேக்சின் கொடுக்க முடியும். ஆனால் இதற்கு எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கிடைக்கலாம். இந்த தடுப்பூசிகள் நீண்ட காலத்திற்கு உங்களைப் பாதுகாக்கப் போகிறதா என்பதை காலம் மட்டுமே சொல்லும். இதில் இரண்டு டோஸ் கொரோனா மருந்து அதிகபட்சம் 1000 என்ற விலையில் கிடைக்கும். அனைவருக்கும் 2024-ஆம் ஆண்டில் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.


Top