logo
கோழி வளர்ப்புக்கு உரிய கூலிய வழங்காத நிறுவனங்களை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம்

கோழி வளர்ப்புக்கு உரிய கூலிய வழங்காத நிறுவனங்களை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம்

11/Nov/2020 05:20:02

ஈரோடு: கறிகோழி பண்ணையாளர்களுக்கு கோழி வளர்ப்புக்கு உரிய கூலிய வழங்காத நிறுவனங்களை கண்டித்தும் கிலோ ஒன்றுக்கு வளர்ப்பு கூலி ரூ.12 வழங்கவேண்டும் என்றும் தமிழகமுழுவதும் கறிக்கோழி பண்iயாளர்கள்  12.11.2020- முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் மாநில தலைவர் ஓ.வி. மூர்த்தி அறிவித்துள்ளார்..

மேலும் அவர் பேசியதாவது: தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் கறிகோழி பண்ணைகள் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகின்றனர். இப்பண்ணைகளில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர். இப்பண்ணைகளுக்கு கோழி நிறுவனங்கள் குஞ்சு தீவனம் ஆகியவற்றை வழங்கி அதனை பெற்று கறிக்கோழிகளை 40 முதல் 50 நாட்கள் வளர்த்துக் கொடுக்கின்றனர்.

இதற்கு வளர்ப்பு தொகையாக கிலோ ஒன்றுக்கு ரூ.3 முதல் 6 வரை மட்டுமே விவசாயிகளுக்கு நிறுவனங்கள் வழங்குகின்றனர். இந்த தொகை போதவில்லை என்று கோரிக்கைகளை 2010-ஆம் ஆண்டு முதல் வைத்து போராடினர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்ததை நடத்தி கிலோ ஒன்றுக்கு ரூ4.50 விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் ஏற்படுத்தி தந்ததார்.

2013 -ஆம் போடப்பட்ட அந்த  ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட எந்த விஷயங்களையும் கடந்த  7 ஆண்டுகளாக கோழி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், கோழி வளர்ப்பு செலவுகள் பல மடங்கு உயர்ந்துவிட்ட சூழலில், இன்று வரை  கிலோ ஒன்றுக்கு ரூ.3.50 முதல் 6 வரை மட்டுமே வழங்குவதாகவும் கோழிப்பண்ணையை தொடர்ந்து நடத்து முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கோழி வளர்ப்பாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, கோழி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைக்கு பல முறை அழைப்புக்கோரியும் இறுதியில் 9.11.2020 அன்று பல்லடத்தில் பேச்சு வார்த்தை நடத்திபோதும் கிலோ ஒன்றுக்கு ரூ.5 வரை மட்டுமே வழங்கமுடியும் என்றும் நாங்கள் கோரிக்கை விடுத்த குறைந்த பட்ட தொகை ரூ.12  தொகையை  தர முடியாது என நிறுவனங்கள் மறுத்து விட்டதால்  கோழிப்பண்ணையை தொடர்ந்து நடத்தி வருவாய் இழப்பை சந்திக்கமுடியாது.

இப்பிரச்னைக்கு  தீர்வு காணும் வரை 12.11.2020 முதல் கோழி வளர்ப்பு பண்ணையாளர் கள் கோழி நிறுவனங்களிடமிருந்து குஞ்சுகளை பெற்று வளர்க்கப் போவதில்லை என மாநில முழுவதும் உள்ள பண்ணையாளர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வளர்க்கும் குஞ்சுகளை பண்ணையுடன் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது என்றும் அவர்கள்  வேறு ஆட்கள் வைத்து குஞ்சுகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செங்கோட்டையன் நகரில் நடைபெற்ற விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது என்றார் சங்கத்தின் மாநில தலைவர் ஓ.வி. மூர்த்தி.


Top