logo
மின்வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சாலின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து தொழிலாளர்கள் தர்னா

மின்வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சாலின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து தொழிலாளர்கள் தர்னா

04/Nov/2020 03:33:41

ஈரோடு:  தமிழ்நாடு மின்சார வாரிய கோட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சாலின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் சார்பில் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் மின்வாரிய ஊழியர்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள்  இன்று(நவ.4) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக செயல்பட்டுவரும் பங்கஜ்குமார் பன்சால் தொழிற்சங்க தலைவர்களை சந்தித்து பேச மறுத்து வருகிறார் என்றும் தொழிலாளர் பொறியாளர்களின் கோரிக்கைகளை பற்றி எடுத்ததுரைக்க நேரம் கோரினால் அனுமதிப் பதில்லை.

கொரோனா காலத்தில் பொதுப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் ஊனமுற்றோர் பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு விடுப்பு தொர்பான தமிழக அரசின் அரசாணை 304 -ஐ மின்வாரியத்தில் அமல்படுத்த மறுத்துவருகிறார். வேலைப்பளு ஒப்பந்தத்தின் அடிப்பiயில் புதிதாக அனுமதிக்கப்பட்ட 63 பிரிவு அலுவலகங்களுக்கு உதவிப்பொறியா ளரை நியமிக்க அனுமதிக்காமல் இருப்பதால் மின்நுகர்வோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

 இதனால் கணக்கீட்டுபிரிவு ஊழியர்களின் வேலைப்பளு அதிகரித்து வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவு அலுவலகத்தை கடும் சுமையுடன் பொறியாளர்கள் பார்த்து வரும் நிலையில் பணிச்சுமை காரணமாக கடுமையான மனஉளச்சலுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஆரம்பகட்ட பதவிகளான கள உதவியாளர்கள் தொழில்நுட்ப உதவியாளர் கணக்கீட்டாளர் இளநிலை உதவியாளர் உதவிப்பொறியாளர் போன்ற பதவிகள் 42,000 -க்கும் மேல் காலியாக உள்ள நிலையில் கூடுதல் பணிச்சுமையை தற்போதுள்ள ஊழியர்கள் பொறியாளர்கள் சுமந்து கொண்டு தiயில்லா மின்விநியோகத்தை வழங்கி வருகின்றனர். 

எனவே தான் எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் இன்று மாநிலம் முழுவதும் மின்சார வாரிய துணை மின் நிலையங்கள் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கோட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் சார்பில் மின்வாரிய ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தர்ணா போராட்டம் காலை பத்து மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Top