logo
தமிழ்நாடு  தினம்: தமிழக மக்களுக்கு கொமதேக வாழ்த்து

தமிழ்நாடு தினம்: தமிழக மக்களுக்கு கொமதேக வாழ்த்து

01/Nov/2020 08:32:51

சென்னை: கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியி்ட வாழ்த்து செய்தி: சாதி மத அரசியல் வேறுபாடு இன்றி தமிழன் என்ற ஒற்றை உணர்வோடு அனைவரும் தமிழ்நாடு தினத்தை கொண்டாடுவோம். தமிழகத்தை ஊழல் இல்லா மாநிலமாக மாற்ற உறுதி ஏற்போம்.

அனைத்து துறையிலும் தமிழகத்தை முன்னேற்ற ஒன்று சேர்ந்து உழைப்போம். தமிழகத்திற்கோ, தமிழனுக்கோ தீங்கு நேர்ந்தால் வேறுபாடு இன்றி ஒருமித்த குரல் கொடுப்போம் என்று மத்திய அரசிற்கு உணர்த்துவோம். தமிழ் மண்ணின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் இக்கால இளைஞர்களுக்கும், வருங்கால தலைமுறைக்கும் எடுத்துரைப்போம். கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என்று தன்னம்பிக்கை கொள்வோம்.

நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக தமிழக அரசு அறிவித்திருந்தாலும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொண்டாடி தமிழர்களாக அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையோடு அனைவருக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். 


                                                                               


Top