logo
உயர்மின் கோபுர விவகாரம்: திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

உயர்மின் கோபுர விவகாரம்: திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

01/Nov/2020 12:29:45

திருப்பூர்: உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட விவசாயிகள் ஊத்துக்குளி வட்டம், ரெட்டியபாளையம், தாராபுரம் வட்டம், சங்கராண்டம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் அக்டோபர் 28  முதல் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்  தொடங்கி 3-ஆவது  நாளாக(அக்.30) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோரிக்கைகள்:  தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோவாட் திட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்திய தந்தி சட்டத்தையும், திட்டத்தையும் எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர், அந்த வழக்கு வருகிற நவம்பர் 27-ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் இறுதி விசாரணை எடுக்கப்படவுள்ளது, இந்நிலையில் திட்டப் பணிகளைத் தொடர்வதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்நுழைவு அனுமதி வழங்கக்கூடாது

காவுத்தம்பாளையத்தில் ஏரி, ஆயக்கட்டு நிலத்தில் துணை மின்நிலையம் அமைக்ககூடாது:  சுஸ்லான் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர்மின் கோபுரம் திட்டத்திற்கு  மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெறப்படவில்லை, இருப்பினும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சட்டத்திற்குப் புறம்பாக முன் நுழைவு அனுமதி வழங்கியுள்ளார், எனவே அந்த முன் நுழைவு அனுமதிகள் ரத்து செய்யப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்குளி மையத்தில் 30-10-2020-இல்  நடந்த போராட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி,ஊத்துக்குளி தெற்கு ஒன்றிய  திமுக செயலாளர் பி.பி. ஈஸ்வரமூர்த்தி,ஊத்துக்குளி மத்திய ஒன்றிய  திமுக செயலாளர் என்.கொண்டசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்குரைஞர் மு.ஈசன், மாநில தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் உரையாற்றினார்கள்.


Top