logo
கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில சட்டமன்ற தேர்தலுக்கு முன் காலவரையற்ற போராட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில சட்டமன்ற தேர்தலுக்கு முன் காலவரையற்ற போராட்டம்

31/Oct/2020 06:01:13

ஈரோடு: கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில சட்டமன்ற தேர்தலுக்கு முன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு அரசுத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் ஈரோடு மாவட்ட மையம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகர்பாளையம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில்  தமிழ்நாடு அரசுத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் ஈரோடு மாவட்ட மையம் சார்பில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. 

இந்த கோரிக்கை மாநாட்டில் அனைவருக்கும் பயனிக்கும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த  வேண்டும். வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.வேலை நிறுத்த காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். காலிப்பணிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊழியத்தில் உடனடியாக நிரப்பவேண்டும் என்பன உள்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில்,  மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வி  பங்கேற்று பேசுகையில், கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்தாண்டு வரும் சட்டமன்ற தேர்தலுக்கு  முன்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் குறிப்பிட்டார். 

கோரிக்கை மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாரதாம்பாள் தலைமை வகித்தார். மாநில செயலாளர் செல்வக்குமார் தொடக்கவுரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வி நிறைவுரையாற்றினார். மாநில செயலாளர் கண்ணன், பொதுச்செயலாளர் மாரிமுத்து மாநிலத்தலைவர் ராஜசேகர், பொதுச்செயலாளர் தாமோதரன், உஷாராணி, கணேசன், குருசாமி ஆகியோர்  பேசினர். இறுதியில் மாவட்ட நிதிக்காப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார் 


Top