logo
வேளாண் சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஈரோட்டில் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஈரோட்டில் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்

31/Oct/2020 05:44:43

ஈரோடு: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3  வேளாண் சட்ட மசோதாவை கண்டித்தும் அதை திரும்பப் பெற வலியுறுத்தியும்  இன்று(அக்.31) நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காளைமாடு சிலை அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ. பி. ரவி தலைமை  வகித்தார். மண்டலத் தலைவர்கள் ஜாபர் சாதிக் , திருச்செல்வம், அயுப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், விவசாய பிரிவு பெரியசாமி,மாவட்ட துணைத்தலைவர்கள்  ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற  வெங்கடாசலம், பாஸ்கர் ராஜ், மாவட்ட பொது செயலாளர்கள் கனகராஜ் ,வின்சென்ட், சச்சிதானந்தம், சாகுல் அமீது, மகளிர் அணித் தலைவி புவனேஸ்வரி, மொடக்குறிச்சி ஞானசேகரன் பொருளாளர் வெங்கட கிருஷ்ணன், ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் துரைசாமி நிர்வாக தலைவர் ரவி,  கே.என். பாட்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 முன்னதாகஇந்திரா காந்தியின் நினைவுநாள் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவர்களது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூலப்பாளையத்தில் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி. ராஜன் தலைமை வகித்தார். மேலிட பார்வையாளர் கரூர் சுப்பிரமணி ,முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல், வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் முத்துக்குமார், பொருளாளர் ரவி, நிர்வாகிகள் நடராஜ், ஈங்கூர் ரவி,தளபதி ரமேஷ். ஆரிப் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வேளாண் சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.. 


Top