logo
திமுக சார்பில் நவ 1-ஆ ம்தேதி ஈரோட்டில் தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டம் காணொலி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக சார்பில் நவ 1-ஆ ம்தேதி ஈரோட்டில் தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டம் காணொலி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

31/Oct/2020 05:34:03

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நவ.1-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 4 மணிக்கு தமிழகம் மீட்போம் என்ற முழக்கத்தோடு 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, வார்டுகளில் மொத்தமாக 212 இடங்களில் சிறப்பு பொதுக்கூட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். குறைந்தபட்சம் 100 பேர் சமூக இடைவெளி விட்டு அமர்கின்ற வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

முகக்கவசம் அணிந்து கிரிமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பே கூட்டத்திற்கு உள்ளே வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திற்கும் எல்இடி டி.வி., வெப் கேமரா, ஜெனரேட்டர், லைட், நாற்காலி, இரண்டு லேப்டாப் ஆகிய அனைத்து வசதிகளும் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் இரண்டு ஐடி விங்க் நிர்வாகிகள், கட்சியின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் சேர்ந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள். 

வரக்கூடிய பொதுமக்கள் திமுகவில் உறுப்பினராக சேர விரும்பினால் அவர்களை ஆன்லைன் மூலம் சேர்க்கின்ற பணிகளை ஒவ்வொரு இடத்திலும் 2 பேர் செய்வர்கள். அனைத்து இடங்களிலும் உணவு ஏற்பாடு செய்யப்படவுள்ளது. 5 இடங்களில் புதியதாக கட்சியில் சேரக்கூடியவர்கள் மட்டும் கலந்து கொள்கிற வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழகம் மீட்போம் சிறப்பு பொதுக்கூட்டம் பிளாட்டினம் மகாலில் நடைபெறவுள்ளது. அங்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொற்கிழி பெறக்கூடியவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

 மற்ற அனைவரும் அவரவர்கள் வசிக்கும் இடங்களில் நடக்கும் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட கழகத்தின் சார்பில் நிகழ்ச்சி நடைபெறும் பிளாட்டினம் மகாலில் இருந்து 22 லேப்டாப்கள் மூலம் மாவட்டம் முழுவதம் நடைபெறும் 212 சிறப்பு பொதுக்கூட்டங்களையும் கண்காணிக்கும் வகையில் 22 அட்மின்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக 44 பேரும் செயல்படுவார்கள். அட்மின்களின் அனுமதி இல்லாமல் வேறு யாரும் இந்த கூட்ட தொடரில் உள்ளே வர இயலாது. 

திமுக தலைவர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றவுள்ளார். அனைத்து இடங்களிலும் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.  பொற்கிழி பெறுவோருக்கு பதக்கம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படவுள்ளது. அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 


Top